மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள நடராஜன்!

திங்கள், 22 பிப்ரவரி 2021 (18:53 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெறுகிறார் என்பது தெரிந்ததே. ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம்பெற்ற நடராஜன் டி20 ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி பந்துவீச்சில் அசத்தினார் என்பதும் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சற்று முன்னர் நடராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
எங்களுடைய லிட்டில் தேவதை நீ. எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ மட்டுமே காரணம். எங்களை பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் உன்னை நேசிக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்