அஸ்வினால் மட்டுமே என் சாதனையை முறியடிக்க முடியும் – முரளிதரன் கருத்து!

வியாழன், 14 ஜனவரி 2021 (15:05 IST)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்களை வீழ்த்தும் திறமையுள்ள வீரராக அஸ்வின் மட்டும்தான் உள்ளார் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் இலங்கையின் முத்தையா முரளிதரன்தான். அவர் 132 போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதற்கடுத்த ஷேன் வார்ன் 708 விக்கெட்களும், அனில் கும்ப்ளே 618 விக்கெட்களோடும் உள்ளனர். இந்நிலையில் முத்தையா முரளிதரன் அளித்த ஒரு நேர்காணலில் இப்போதுள்ள பந்து வீச்சாளர்களில் அஸ்வினால் மட்டும்தான் 700 முதல் 800 விக்கெட்களை வீழ்த்த முடியும் என நான் நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார். மற்றொரு சிறந்த பவுலரான நாதன் லயனால் கூட அந்த சாதனையை நிகழ்த்த முடியாது எனக் கூறியுள்ளார்.

34 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் 72 போட்டிகளில் விளையாடி 377 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாதன் லயன் 99 போட்டிகளில் 396 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்