இந்தியாவில் இப்போது இருக்கும் ஆட்சியால்… இருநாட்டு தொடர் வாய்ப்பில்லை – பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு!

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:30 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரு நாட்டுத் தொடர் நடக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடைசியாக 2013 ஆம் ஆண்டு இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடந்தது. அதன் பின் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்நிலையில் இரு நாட்டு தொடர் நடக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அதில் இந்தியாவில் ’இப்போது நடக்கும் ஆட்சி இருக்கும் வரையில் இரு நாட்டு தொடர் அமைதியாக நடக்க வாய்ப்பில்லை. அது சலசலப்பையே ஏற்படுத்தும்.’ என கூறியுள்ளார். இது இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சென்ற போது வீரர்கள் மேல் தாக்குதல் நடந்ததால் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட உலக கிரிக்கெட் நாடுகள் மறுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்