84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (21:18 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்த போது டிக்ளேர் செய்தது.
 
இதன்மூலம் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 289 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
 
தற்போது வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் குவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் களத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்