மகளிர் ஐபிஎல்: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

Mahendran

சனி, 16 மார்ச் 2024 (09:04 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியை பெங்களூர் அணி வீழ்த்தியதை அடுத்து அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை மகளிர் அணி 20 ஓவர் களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது

இந்த நிலையில் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணி பெற்ற இந்த வெற்றி காரணமாக இறுதி போட்டியில் அந்த அணி டெல்லி உடன் வரும் 17ஆம் தேதி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்த ஆண்டின் மகளிர்  ஐபிஎல் கோப்பையின் சாம்பியன் அணி என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்