அடுத்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு பதில் வேறு கேப்டன்?? முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்

சனி, 14 நவம்பர் 2020 (13:06 IST)
நடப்பு ஐபிஎல்-2020 தொடரில் அதிகப்பேரால்  விமர்சிக்கப்பட்ட அணி சென்னை கிங்ஸ்,. வழக்கம் போலவே இந்த வருடமும் சென்னை அணி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்தனர்.

ஆனால் ரெய்னா.ஹர்பஜன் சிங் போன்ற சீனியர்  வீரர்கள் இல்லாததால் சென்னை அணி தடுமாறியது.

அதனால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இத்தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறிய பின் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்ற் தகவல்கள் பரவியது.

ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், அடுத்த ஐபிஎல் சீசரில் சென்னை அணியின் கேப்டன்  தோனி இருக்கமாட்டார் என தெரிவித்துள்ளார். தோனிக்கு பதிலாக  தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டூபிளசிஸ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்