யாரையெல்லாம் தீய சக்தி அண்டாது தெரியுமா....?

எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் அல்லது தலையில் வைத்து சிறிதுநேரம் பொருத்து அதை காலால் நசுக்கி வீசிவிட்டு காலை கழுவிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும்.

உப்பு தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும், அண்டாது.
 
துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது. (அதனால் தான் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்த தவசிகள் துளசி செடியை வளர்த்து வழிபட்டனர்.)
 
நமக்கு மிக நம்பிக்கையான தெய்வத்தை நினைத்து செப்பு தகட்டில் ஒரு சூலம் வரைந்து உடலில் எங்காவது தாயத்து இட்டு அணிந்து கொண்டாலும் தீயசக்தி  அண்டாது விலகிவிடும்.
 
பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும்.
 
அமாவாசை இரவில் அகண்ட தீபம் ஏற்றி அதன் அருகில் தூங்காமல் தீபத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாலும் விருப்பம் நிறைவேற வழிபிறக்கும் தீயசக்தியும் விலகிவிடும்.
 
கல்யாண பூசணியோ அல்லது எலுமிச்சை கனியையோ கத்தியால் சரிபாதியாக வெட்டி குங்குமம் தடவி அமரும் இருபக்கமும் வைத்தாலும் அல்லது வீட்டின் தலைவாயிற்படி இருபக்கமும் வைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்