சனி பகவானின் பாதிப்பில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்...!!

சனி தொல்லையிலிருந்து விடுபட, 3,5,7,9.. எண்ணிக்கையிலான விளக்குகளை ஏற்றி, சனிபகவானை வீட்டிலியே வழிபடலாம். எந்த இடத்தில் பிரச்சனையோ அந்த  இடத்திலிருந்து வேண்டுவதே சரியானதாய் இருக்கும்.

சனி தொல்லையிலிருந்து விடுபட, வெளியில் செல்லும்போதெல்லாம் உலர் திராட்சையில் சிலவற்றை வாயில் போட்டுக்கொண்டு செல்லலாம்.
 
சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழி படவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
 
வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமைகளில் சாற்றி வணங்கி வழிபடவும்.
 
சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் கெடுதல் குறையும். ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அல்லது வெற்றிலைமாலை சாற்றி வழிபடனும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
 
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம். தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 
வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும். பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.
 
தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்