செல்வம் பெருக இந்த மூலிகையை கொண்டு தீபம் ஏற்றினால் போதும் !!

ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கும். சித்தர்கள் அறிந்து வைத்து இந்த உலகிற்கு உணர்த்தியது ஏராளமான மூலிகை ரகசியங்கள் இன்றும்  வழக்கத்தில் உள்ளன.

அபூர்வ வகை மூலிகை எல்லாம் ஒன்றும் இல்லை. சாதாரணமாக நம் கண் முன்னே உள்ள செடிகளில் இருக்கும் மருத்துவம் மற்றும் மகத்துவம் வாய்ந்த குணங்கள் கூட நமக்கு தெரிவதில்லை. அத்தகைய மூலிகை செடி வகைகளில் ஒன்று தான் இந்த பரிகாரம் செய்ய உகந்தது. இது அபூர்வ சக்தி கொண்டது. இதன்  பெயர் பெருந்தும்பை என்று கூறப்படும் பேய் விரட்டி மூலிகையாகும். 
 
இது பச்சையாக பற்றி எரியும் தன்மை கொண்டது. குபேர மூலிகை என்றும் வழக்கத்தில் உள்ளது. இந்த இலையில் குபேர தீபம் ஏற்றினால் எல்லா வளமும் பெருகும் என்று கூறப்படுகிறது. 
 
48 நாட்கள் தினமும் இந்த ஒரே ஒரு இலையை திரியாக கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். சகல தோஷங்களும் நீங்க பெற்று முன்னேற்றம் காணப்படும். சாதாரண அகல் விளக்கில் இந்த இலையை திரித்து அப்படியே பச்சையாக திரி போன்று உருவாக்கி கொள்ளுங்கள். 
 
மண் விளக்கில் நல்லெண்ணை, நெய் அல்லது இழுப்பை எண்ணெய் ஊற்றி இந்த திரியை நனைத்து தீபம் ஏற்ற வேண்டும். அவ்வளவு தான். இந்த மூலிகை தீபத்தின் புகை உங்கள் இல்லம் முழுவதும் சூழ்ந்து கொண்டு நல்ல சக்திகளை திரட்டி தரும். எந்த வகையான தீய சக்திகள் உங்கள் வீட்டில் இருந்தாலும் இதன்  வாசத்தில் ஓடி விடும். இது குபேரனுக்கு மிகவும் பிடித்த மூலிகையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்