மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ₹210 கோடி அளவிற்கு சேதம்!

புதன், 13 டிசம்பர் 2023 (20:05 IST)
சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தால்  வீடுகள், கட்டிடங்கள்  நீரில் மூழ்கினர். மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண  நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த  நிலையில், சென்னையில், குடியிருப்புகள், ரயில் நிலையம், விமான நிலையங்கள் மட்டுமின்றி மெட்ரோ ரயில் நிலையமும் சேதமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதன்படி, சென்னையை தாக்கிய மிக்ஜாம் மழை வெள்ளப் பாதிப்புகளால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ரூ.210 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக  மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், தற்போது நடைபெற்று வரும் 2 ஆம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடி அளவிலான  சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்