காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? செல்வப் பெருந்தகை தகவல்

Sinoj

புதன், 20 மார்ச் 2024 (14:43 IST)
டெல்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நாளை இரவுக்குள் தமிழக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்  என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
தற்போது காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் பாஜகவுக்கு எதிராக இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,  ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 2 வது கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியானது இதில், முக்கிய வேட்பாளர்கள் யார் எண்ற தகவல் இருந்தது.
 
தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டன.
 
எனவே இத்தொகுதியில்  வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் பற்றி அக்கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது:
 
தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம். டெல்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்