அதிமுக - திமுக போட்டியிடாத விருதுநகர் தொகுதி: ராதிகா - விஜயபிரபாகரன் - மாணிக் தாகூர்.. வெற்றி யாருக்கு?

Mahendran

வெள்ளி, 22 மார்ச் 2024 (15:10 IST)
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பிரதான கட்சிகளாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிடாத தொகுதியாக விருதுநகர் தொகுதி உள்ளது என்பதும் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளரும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடும் நிலையில் பாஜகவும் இங்கு நட்சத்திர வேட்பாளரை களம் இறக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் விருதுநகர் தொகுதியில் கட்சியின் போது செயலாளர் பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அதே போல் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெற்றி பெற்ற மாணிக் தாகூர் என்பவரை இந்த தொகுதியில் களமிறக்கியுள்ளது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து சமீபத்தில் கட்சியை இணைத்த சரத்குமாரின் மனைவி ராதிகா என்று போட்டியிடுகிறார். எனவே ராதிகா, விஜய பிரபாகரன் மற்றும் மாணிக் தாகூர் ஆகிய மூன்று பேர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் கடும் சவாலாக மூன்று பேருக்குமே வெற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது

விருதுநகர் தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும் அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த முறை வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் விருதுநகரில் நாடார் வாக்குகள் மிக அதிகமாக இருப்பதால் ராதிகாவுக்கு அது கூடுதல் பலம் என்றும் அரசியல் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்