விஜயகாந்துக்கு கொரோனா: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:14 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சற்று முன்னர் தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததாகவும் ஆனால் அது சரியாகிவிட்டதாகவும் விஜயகாந்த் தற்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
 
தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட் 19 தொற்று இருப்பது செப்டம்பர் 22ஆம் தேதி அன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடலில் சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 
சற்றுமுன் திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்துக்கு கொரோனா இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மியாட் மருத்துவமனை நிர்வாகம் இருப்பதாக கூறியிருப்பதால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்