அத்திவரதர் சிறப்பு தரிசனத்துக்கு விஜயகாந்த் ரூ, 3 லட்சம் தட்சணை ! வைரல் தகவல்

திங்கள், 15 ஜூலை 2019 (17:42 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசியலில் புயலாகக வந்து தேமுதிக கட்சியை தொடங்கினார். முன்னாள்  முதல்வர்களான , ஜெயலலிதா , கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ததால் அவர் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானார்.  பின்னர் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, அரசியலில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கடந்த தேர்தல்களிலும் வலுவான பிரச்சாரன் செய்ய முடியாமல் தேமுதி திணறியது. ஓட்டி எண்ணிக்கை முடிவிகும் பல இடங்களில் வாங்கு வங்கி சரிந்தது.
 
இந்நிலையில் தற்போது அரசியலில் அவ்வப்போது அறிக்கைவிட்டாலும் அவரால் களத்தில் இறங்கி போராட முடியவில்லை என்று தேமுதிக தொண்டர்கள் கவலையுடன் இருந்தனர்.
 
இப்படியிருக்க, இன்று காஞ்சு அத்திவரதர் கோவிலில் ரூ, 3 லட்சம் செலுத்தி, விஜயகாந்த் தன் குடும்பத்தினருடன் சிறப்பு தரிசனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
மேலும், அத்திவரதரை சிறப்பு தரிசனம்  செய்ததுடன், தன் மகன் நடிக்கும் மித்ரன் படத்திற்கு சின்னதான பூஜையும் அவர் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
 
மேலும் 15 நிமிடங்கள் அவர் அத்திவரதரை தரிசனம் செய்தார். ஆனால் கடந்த ஒருவாரமாகவே தன் மகன் நடிக்கும் மித்ரன் படத்திற்கான் பூஜையை இங்கு நடத்த விரும்பியதாகவும் ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், சுமார் 3 லட்சம் ரூபாய் வரை அர்ச்சகர்களுக்கு கேப்டன் தட்சணை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்