பெஸ்ட்டு கூஜா தூக்கி யார்? ரேசில் ஈபிஎஸ் - ஓபிஎஸ்: உதயநிதி கலாய்!!

வியாழன், 7 ஜனவரி 2021 (09:45 IST)
மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதில்தான் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி உள்ளது என உதயநிதி விமர்சனம். 

 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட அவர் அங்கு பின்வருமாறு பேசினார்... 
 
மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதில்தான் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி உள்ளது. அதிமுக ஆட்சி ஊழல் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் உள்ளது. மோடியின் எடுபிடியாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 
 
மோடிக்கு அடிமையாக இருப்பதில் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது. டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என எடப்பாடி சொல்கிறார். மோடிக்கு கூஜா தூக்கிக் கொண்டுள்ளார்.
 
முதலமைச்சரில் இருந்து அமைச்சர்கள் வரை பல்வேறு வகையில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் குவித்துள்ளனர். மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் என யாருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்