விநாயகர் சதுர்த்தி கொண்டாடினாரா உதயநிதி! – இரு பக்க மேளமாய் விழும் அடி!

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (09:20 IST)
திமுக இளைஞரணி செயலாளரும், மு.க.ஸ்டாலின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சிலை ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக என்றாலே மத எதிர்ப்பு என்று தமிழக மக்களிடையே எண்ணம் பரவியுள்ளது. இந்நிலையில் திமுகவினரின் சமீப கால செயல்பாடுகள் அதற்கு நேர்மாறானதாக உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுகவினர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் மண் விநாயகர் சிலை ஒன்றில் எருக்கம்பூ மாலை அணிவித்துள்ள படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு பாஜகவினர் மற்றும் இந்து மத நம்பிக்கையாளர்கள் பலர் திமுக தேர்தல் வருவதால் அரசியல் செய்வதற்காக இந்து மத பக்தியை கையில் எடுத்துள்ளார்கள் என்ற ரீதியில் பேசி வருகின்றனர்.

அதேசமயம் திமுகவினர் “திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி அல்ல. திமுகவில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான அதிகமாக உள்ளனர். அவரவர் நம்பிக்கையை பின்பற்ற அவர்களுக்கு உரிமை உண்டு” என்று கூறி வருகிறார்கள். இந்த பதிவு குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

pic.twitter.com/HEld3ymoov

— Udhay (@Udhaystalin) August 23, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்