நான் வெற்றி பெறுவேன் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும்: டிடிவி தினகரன்

Siva

திங்கள், 1 ஏப்ரல் 2024 (08:48 IST)
நான் வெற்றி பெறுவேன் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் பொதுச் செயலாளர் டிடிவி  தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் 14 வருடத்திற்கு பிறகு மீண்டும் வேட்பாளராக வந்ததற்கு நன்றி என மக்கள் கூறுகிறார்கள் என்றும் ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்கவே கட்சி ஆரம்பித்தேன் என்றும், கருணாநிதி எப்படி பொதுக்குழுவை கூட்டி எம்ஜிஆரை நீக்கினாரோ, அதேபோல் தான் தற்போது மீண்டும் வரலாறு நடந்துள்ளது ன்று தெரிவித்தார்

என் பழைய நண்பர் இங்கு எனக்கு போட்டியாக நிற்கிறார், நான் வெற்றி பெற்று விடுவேன் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் நான் இந்த குக்கர் சின்னத்தை வைத்து ஜெயித்து விடுவேன் என்றும் தெரிவித்தார்

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்