நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

Siva

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:26 IST)
கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு, நாளை நகரில் உள்ள 5 டாஸ்மாக் கடைகளை மூட தஞ்சை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கும்பகோணம் நகர பகுதிகளில் மாசி மகா திருவிழா நடைபெறுவதால் கும்பகோணம் நகர பகுதிகளில் இயங்கி வரும் மதுபான கடை தற்காலிகமாக மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் தீர்ப்பை கடைபிடிக்கும் வகையில் நாளை அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி கும்பகோணம் பகுதியில் உள்ள ஐந்து மதுபான கடைகள் மற்றும் கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்கள் ஆணையிடப்படுகிறது ’ என தஞ்சை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்