முதல்வர் கணக்கில் வந்து குவியும் நிதி: தாராளம் காட்டும் அரசியல்வாதிகள்!!

வெள்ளி, 27 மார்ச் 2020 (11:05 IST)
தமிழக அரசியல்வாதிகள் தங்களது சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளனர். 
 
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உதவும்வகையில்  திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புக்கொண்டனர். இதோடு திமுக எ.பி, எம்.எல்.ஏ-க்கள் தங்களது நாடாளுமன்ற அல்ல சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும் முன்வந்துள்ளனர். 
 
இதனை தவிர்த்து எம்பி அன்புமணி ராமதாஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.3 கோடியை ஒதுக்கியுள்ளார். தேவைப்பட்டால் இன்னும் நிதி ஒதுக்க தயராக உள்ளதாகவும் அறிவித்தார். 
 
தற்போது இதே வரிசையில் அதிமுக எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் இணைந்துள்ளனர். ஆம், முதல்வர், துணை முதல்வர், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்களது மார்ச் மாத சம்பளத்தை நிவாரண நிதியாக கொடுக்க முன்வந்துள்ளனர். 
 
மேலும், தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒரு கோடியை எம்.பிக்களும், 25 லட்சத்தை எம்.எல்.ஏ-க்களும் ஒதுக்கீடு செய்ய உள்ளனர். இவர்களை தவிர்த்து கவனர் பன்வாரிலால் புரோகித் தனது மார்ச் மாத சம்பளத்தையும், எம்பி வைகோ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடியையும் கொடுக்க முன்வந்துள்ளனர். 
 
இவர்களோடு பாமக தலைவர் ஜி.கே.மணி தனது முன்னாள் எம்.எல்.ஏ-க்கான மார்ச் மாத ஓய்வூதியத்தை கொடுப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிதி அனைத்தும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்