தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு!

சனி, 8 மே 2021 (08:53 IST)
தமிழகத்தில் மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 26,000 தாண்டி உள்ள நிலையில் கொரோனா வைரஸில் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அல்லது முழு ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. 
 
அந்த வகையில் நேற்று முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து தமிழகத்தில் மே 24 வரை, அதாவது மே 10 ஆம் தேதி முதல் (வரும் திங்கட்கிழமை) மே 24 தேதி வரை முழு ஊரடங்கு அமலபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த மூழு ஊரடங்கு காலத்தில், 
 
1. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது
2. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது
3. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்
4. அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது
5. இன்றும், நாளையும் மட்டும் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு  9 மணி வரை இயங்கும்   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்