முருகன் உள்பட 3 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்: தமிழக அரசு தகவல்..!

Mahendran

செவ்வாய், 26 மார்ச் 2024 (12:26 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தப்பட்டதாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு இலங்கை தமிழர்கள் சிறையில் இருந்த நிலையில் அவர்கள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் இலங்கை செல்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது அவர்களில் மூன்று பேருக்கு பாஸ்போர்ட் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூன்று பேருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. இதனை அடுத்து ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அவர்கள் தங்கள் தாய்நாடான இலங்கைக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதிக்க வேண்டும் என்று முருகன் உள்பட மூன்று பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கின் விசாரணையில் தான் தமிழக அரசு இந்த பதிலை இன்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்