பால் பாக்கெட்டை தொடர்ந்து திரையரங்குகளில் திருக்குறள்: கடம்பூர் ராஜூ!

சனி, 16 நவம்பர் 2019 (13:50 IST)
இனி திரையரங்குகளில் திரைப்படத்தின் டைட்டில் போடுவதற்கு முன்னால் திருக்குறள் ஒளிபரப்ப வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது.

திருக்குறளின் பெருமையை உணர்த்தும் வகையில் அதை மக்களிடையே கொண்டு செல்ல தமிழக அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின்  படம் மற்றும் திருக்குறள் விளக்கவுரையோடு இடம் பெறும் என அறிவித்தார்.

அதை தொடர்ந்து தற்போது திரையரங்குகளிலும் திருக்குறள் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதுகுறித்து பேசிய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ “ஆரம்ப காலங்களில் திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னால் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டது. அதே போல இனி வரும் படங்களில் படத்தின் தலைப்புக்கு முன்னதாக திருக்குறள் இடம்பெற செய்ய தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேசவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்பப்படும் வகையில் தற்போது திருக்குறளும் ஒளிபரப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்