மதிப்பெண்ணை உயர்த்த தேர்வு என்பது உண்மை இல்லை – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

புதன், 21 ஏப்ரல் 2021 (10:43 IST)
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில் அவர்களது மதிப்பெண்ணை உயர்த்த தேர்வு நடத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் 11ம் வகுப்பில் சேர மதிப்பெண் விகிதம் அவசியம் என்பதால் மதிப்பெண்ணை உயர்த்தி கொள்ள விரும்பும் மாணவர்களுக்காக மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆல்பாஸ் அறிவித்த பிறகு ஒரு தேர்வு என்பது பெற்றோர், மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வி துறை இவ்வாறாக கூடுதல் தேர்வு நடத்துவதாக வெளியான அறிவிப்பில் உண்மை இல்லை என்றும், அரசு அறிவித்த ஆல் பாஸ் மட்டுமே செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்