தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி

செவ்வாய், 5 மே 2020 (18:50 IST)
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியவற்றின் சாரம்சம்
 
அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் என்பதாலும், பொதுக்கழிப்பிடங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது, சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது
 
தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாள்தோறும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது 
 
கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
 
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் சரியான நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது 
 
ஜூன் மாதத்திற்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் விலையில்லாமல் அளிக்கப்படும் 
 
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்