ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது! – தீர்மானம் நிறைவேற்ற ஆட்சியர் முடிவு!

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:57 IST)
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அளிக்கப்பட்ட அனுமதிக்கு எதிராக தீர்மான நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களின் கருத்துகளை ஏற்று மாவட்ட ஆட்சியர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்