நீட் தேர்வின் இறுதி மரணம் இது! நாம் செய்யப் போவது என்ன ? கமல் டுவீட் You sent 57 minutes ago டிவி நிகழ்ச்ச்சி

சனி, 12 செப்டம்பர் 2020 (16:19 IST)
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்தக் கொரொனா காலத்தில் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அரசுப் பல்வேற்யு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில்,  மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளதாவது : வெளிப்படைத்தன்மையுள்ள தண்ணீர் பாட்டில், 50 மில்லி கிராம் அளவுக்கு சானிடைசர் எடுத்துவரலாம், முகக் கவசம் அணியலாம் ஆறு அடி இடைவெளியைப் பின்பற்ற அறிவித்துள்ளது.

சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் இந்த ஆண்டு மிகுந்த பயத்துடனே படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று படித்துக் கொண்டிருந்த போது தனது அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை எனத் தெரிவித்துள்ளார்.
 #கமல்ஹாசன் #kamalhasan #neetexam #Tamilnadu

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்