இன்று தை அமாவாசை: முன்னோர்களை வழிபட்டு வரும் பொதுமக்கள்!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (07:22 IST)
இன்று தை அமாவாசை: முன்னோர்களை வழிபட்டு வரும் பொதுமக்கள்!
இன்று தை அமாவாசை நாளை அடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் பொது மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
 
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று கன்னியாகுமரி, ராமேஸ்வரம், குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொது மக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர் 
 
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது சிறந்தது ஒன்றாக கருதப்பட்டாலும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசையில் மூதாதையர்களை வணங்குவதில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல் ஆறு ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்தும், திதி தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டு வரும் தமிழக மக்கள் இன்றும் அதே போல் தர்ப்பணம் செய்து வருகின்றனர்
 
ஒரு சிலர் வீட்டிலேயே தர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை இல்லாதவர்கள் மட்டுமே அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும், முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் செய்தால் நம்முடைய பரம்பரைக்கே நல்லது என்றும் ஒரு ஐதீகமாக உள்ளது. இன்று தை அமாவாசை வழிபாட்டிற்கான சிறந்த நேரம் காலை 10.30 மணி முதல் 11.30 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்