மதுரையை பின்னுக்கு தள்ளிய சென்னை! – கலகலக்கும் டாஸ்மாக் வசூல்!

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (14:46 IST)
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்ததால் ரூ.243 கோடி வசூலாகியுள்ளது.

கடந்த இரண்டு மாத காலமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் மது பிரியர்கள் சனிக்கிழமையே இரண்டு நாட்களுக்குமான மதுவை வாங்குவதால் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் வருமானம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.243 கோடியாக உள்ளது. கடந்த வாரம் வரை சென்னையில் அநேகமான டாஸ்மாக் திறக்கப்படாததால் மதுரை மண்டலம் அதிகமான மது விற்பனை வசூலை கண்டு வந்தது. இந்நிலையில் இந்த முறை சென்னை மண்டலத்தில் ரூ.52 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது.

மதுரை மண்டலத்தில் ரூ.49 கோடிக்கும், திருச்சியில் ரூ.48 கோடிக்கும், சேலத்தில் ரூ.47 கோடிக்கும், கோவையில் ரூ.45 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்