8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! – எந்தெந்த மாவட்டங்கள்?

வியாழன், 19 நவம்பர் 2020 (12:21 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுபெற்றுள்ள நிலையில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கின்றன. தென் மாவட்டங்களில் பரவலாக பெய்யும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அருவிகளும் ஆர்பரித்து ஓட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்