தமிழகத்தில் பொதுமுடக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! – மாவட்ட நிர்வாகங்களுக்கு புதிய உத்தரவு!

புதன், 31 மார்ச் 2021 (13:03 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில் தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்தும் மக்களிடையே பல்வேறு யூகங்கள் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவலை பொறுத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாவட்ட நிர்வாகங்களுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் பகுதி நேர ஊரடங்கு போன்றவை அறிவிக்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்