6 மாவட்டங்களுக்கு கனமழை... எங்கெங்கு தெரியுமா?

திங்கள், 14 செப்டம்பர் 2020 (12:28 IST)
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. எனவே வடதமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
அதன்படி நேற்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழையை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதகாவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்