23 வர வெயிட் பண்ண வேணா, இன்னைகே கூட கனமழை வந்துரும்!!

சனி, 21 நவம்பர் 2020 (14:17 IST)
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 
 
வங்க கடலில் நவம்பர் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இதனால் தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  
 
மேலும், தமிழகத்தில் 23 ஆம் தேதி கனமழையும் 24 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி மழைக்காக 23 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 
 
ஆம், தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதோடு காவிரி டெல்டா, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 24, 25 ஆம் தேதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்