தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு - பீதியை கிளப்பும் ராதாகிருஷ்ணன்!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (08:35 IST)
சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு போடப்பட்டதை போல தமிழகத்திலும் போடப்படும் என எச்சரிகத்தார். 

 
தமிழகத்தில் நேற்று மேலும் 449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்ன் மூலம் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,48,724 பேராக அதிகரித்துள்ளது.
 
மேலும், தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,32,167 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,466 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தனது சமீபத்திய பேட்டியில், தமிழகத்தில் கொரோனா தொற்று சில வாரங்களாக 450-க்கும் குறையாமல் உறுதியாகி வருகிறது. ஐதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதால் தமிழகத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 
 
மக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை மக்கள் நிறுத்திவிட்டனர். இது மேலும் தொடர்ந்தால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு போடப்பட்டதை போல தமிழகத்திலும் போடப்படும் என எச்சரித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்