கமலுக்கு சூர்யா எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?

புதன், 17 ஜூலை 2019 (19:37 IST)
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் கூறிய ஒரு கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக அதிமுகவிலிருந்தும் பாஜகவில் இருந்தும் ஒருசில தலைவர்கள் சூர்யாவுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். ஆனால் அதே நேரத்தில் சூர்யாவுக்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தனர்
 
நாம் தமிழர் கட்சியின் சீமான், திமுகவின் நாஞ்சில் சம்பத், மக்கள் நீதி மையத்தின் கமல்ஹாசன் உள்பட பலர் சூர்யாவின் கருத்தை ஆமோதித்தனர், அதேபோல் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் ரஞ்சித் உட்பட பலர் சூர்யாவின் கருத்தை அனுமதித்தனர் 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த்தற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வணக்கத்துக்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரை உலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என்று சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்