அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராக வேண்டும்: கலெக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Mahendran

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (16:49 IST)
மணல் குவாரி சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
முன்னதாக சட்டவிரோத மணல் குவாரி குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் அனுப்பிய நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்கு தொடர முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  
 
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசுநிர்ணயம் செய்த அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்ட நிலையில் திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கமளிக்க அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. 
 
இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தான் தற்போது உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்