அரசு நிகழ்வுகளை தள்ளி வைய்யுங்கள்: முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை!

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (16:28 IST)
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறது நேரத்திற்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கனிமொழி, மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு ஆகியோர் இருந்தனர். 
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ஸ்டாலின் முதல்வரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் முதல்வரிடம் விளக்கி இருக்கிறார். அதன்பின் காவேரி மருத்துவமனைக்கு வரவிருக்கும் தலைவர்களின் பட்டியலை கொடுத்து அதர்கு ஏற்றவாறு பாதுகாப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். 
 
அதோடு கருணாநிதியின் உடல்நிலையில் பிரச்சனை இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நடக்க இருக்கும் அரசு நிகழ்வுகளை தள்ளி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். 
 
கருணாநிதியின் உடலில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் தமிழகம் முழுக்க கூடுதல் பாதுகாப்பு கொடுக்க அவர் கோரிக்கை வைத்து இருக்கிறார். 
 
இதற்கு ஏற்றார் போல் தமிழகத்தில் ஏற்கனவே போலீஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள  அனைத்து மாவட்ட காவல் துறையினரையும் பாதுகாப்பை பலப்படுத்த சென்னை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்