முதல்வர் ஸ்டாலின் - வைகோ இன்று சந்திப்பு.. கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகிறதா?

Mahendran

வெள்ளி, 8 மார்ச் 2024 (10:11 IST)
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேருக்கு நேர் சந்தித்து தேர்தல் உடன்பாடு குறித்து கையெழுத்திட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த பேச்சு வார்த்தையை கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாக கூறப்பட்டது. 
 
விசிகவை பொருத்தவரை இரண்டு தனி தொகுதிகள் மற்றும் ஒரு பொது தொகுதி என மூன்று தொகுதிகளில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மதிமுக ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதி என்றும் மக்களவைத் தொகுதியில் தங்கள் கட்சி சின்னமான பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் பிடிவாதமாக இருப்பதாகவும் இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை வைகோ நேரடியாக சந்தித்து பேச இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்