தமிழகத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதிவரை சிறப்பு ரயில்கள் ரத்து

சனி, 27 ஜூன் 2020 (21:27 IST)
தமிழகத்தில்  ஜூலை மாதம் 15 ஆம் தேதிவரை  சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டோர்  எண்ணிக்கை 78,335 பேராக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இன்று ஒரே நாளில்68 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் மட்டும் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 45 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக 51,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில்  ஜூலை மாதம் 15 ஆம் தேதிவரை  சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அரசின் கோரிக்கையை ஏற்றௌ  7 ரயில்களின் சிறப்பு சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்