பொன்முடி தொகுதி குறித்து சபாநாயகரிடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை: தேர்தல் ஆணையர்..!

Mahendran

சனி, 2 மார்ச் 2024 (08:08 IST)
முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அவருடைய அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது என செய்திகள் வெளியானது. ஆனால் இன்னும் சபாநாயகரிடம் இருந்து து முறையாக பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து சபாநாயகரிடம் இருந்து இதுவரை தகவல் இல்லை என்று தெரிவித்தார்
 
ஆனால் அதே நேரத்தில் விளவங்கோடு  தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு  தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு பாதுகாப்புக்காக சென்னையில் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர் என்றும் தெரிவித்தார். முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்