திடீர் மாரடைப்பு.. எஸ்.பி.பி. மரணத்தின் காரணத்தை விளக்கிய மருத்துவமனை!

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (14:25 IST)
எஸ்பிபி காலமானதை மருத்துவமனை நிர்வாகம் சற்று முன் அறிக்கை மூலம் உறுதிசெய்துள்ளது. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  
 
எஸ்பிபி உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சரியாக இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எஸ்பிபி காலமானதை மருத்துவமனை நிர்வாகம் சற்று முன் அறிக்கை மூலம் உறுதிசெய்துள்ளது. 
 
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, கொரோனா பாதிப்பு காரணமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆக்.5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
கடந்த செப். 4 ஆம் தேதி அவருக்கு கொரோனா நெகடிவ் என முடிவு வந்தது. நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமானது. என்வே உரிர்காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மதியம் 1.04 மணிக்கு அவர் காலாமானர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்