சாத்தான்குளம் நேராக சென்று விசாரிக்க போகிறேன்! – களமிறங்கிய புதிய ஐ.ஜி முருகன்

வியாழன், 2 ஜூலை 2020 (12:39 IST)
தமிழகம் முழுவது காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக தென்மண்டல ஐஜியாக பொறுப்பெற்றுள்ள முருகன் சாத்தான்குளம் வழக்கு குறித்து பேசியுள்ளார்.

சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாமாக முன் வந்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து உடனடி விசாரணையை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளதால் தென்மண்டல ஐஜியாக முருகன் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதும் சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசியுள்ள முருகன் “லாக்கப் டெத் சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியது என்பதே காவல்துறையின் நிலைபாடு. சாத்தான்குளம் வழக்கில் சாட்சியல் அளித்துள்ள காவலர் ரேவதி மற்றும் அவர் குடும்பதிற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போலீஸார் 48 மணிநேரம் சிறையில் இருந்தாலே அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் சாத்தான்குளம் வழக்கு குறித்து தான் நேரில் சென்று விசாரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்