விண்ணை முட்டிய தங்கம் விலை! எழைகளால் இனி தங்கம் வாங்க முடியுமா?

திங்கள், 27 ஜூலை 2020 (15:39 IST)
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதன் இன்றைய விலை தற்போது கிறுகிறுக்க வைத்துள்ளது

 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.     

ஆம், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.39,824க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை நடுத்தரவர்க மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வரலாற்றில் முதன் முதலாக 22 கேரட் தங்த்தின் விலை ரூ. 40 ஆயிரத்தைக் கடந்தது.

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 அதிகரித்து ரூ.40,104 க்கு விற்பனை ஆகிறது.

உலகமெங்கும் கொரொனா தாக்கத்தால் பொருளாதார ஸ்திரமின்மையால் பத்திரங்களிலும், டாலரிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதே தங்கம் உயர்வுக்கு காரணம் என்று தெரிவிக்கபபடுள்ளது. இப்படியே விலை ஏறினால் தங்கம் என்பது ஏழைகளின் கனவாகிவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்