சென்னை சிவன் கோவில்களில் விடிய விடிய சிவராத்திரி கொண்டாட்டம்.. அதிகாலை வரை சிறப்பு பூஜைகள்..!

Mahendran

சனி, 9 மார்ச் 2024 (08:17 IST)
நேற்று மகா சிவராத்திரி திருவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாகவும் ஏராளமான சிவ பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் மற்றும் மகா சிவராத்திரி இரண்டும் ஒரே நாளில் வந்ததை அடுத்து ஏராளமானோர் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பாக சிவராத்திரி திருவிழாவை பக்தர்கள் விடிய விடிய கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்த நிலையில் அனைத்து சிவன் ஆலயங்களிலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களுக்கு நேற்று இரவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது என்றும் சென்னையில் நேற்று கூடுதல் பேருந்துகள் விடிய விடிய இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் மட்டுமின்றி புறநகரிலும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா விடிய விடிய கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்