அண்ணன் வெற்றி பெற்றால் அப்பா ஆத்மா சாந்தியடையும்: விஜயகாந்த் இளைய மகன் பிரச்சாரம்..!

Mahendran

சனி, 13 ஏப்ரல் 2024 (11:55 IST)
விருதுநகர் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஓட்டு கேட்டு அவருடைய சகோதரர் நடிகர் சண்முக பாண்டியன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
 சண்முக பாண்டியன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ’நீங்கள் விஜயகாந்த் சாயலில் இருக்கும் எனது அண்ணனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் எனது அப்பா விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையும் என்று உருக்கமாக பேசினார். 
 
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் இன்று பிரச்சாரம் செய்தார். இது எனது முதல் தேர்தல் பிரச்சாரம் என்றும் என்னுடைய அண்ணனுக்காக நான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன் என்று கூறிய அவர் என்னுடைய அப்பாவை வெற்றி பெற வைக்கவில்லையே என யாரும் வருத்தப்பட வேண்டாம் என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் அண்ணன் விஜயபிரபாகரனை வெற்றி பெற வைத்தாலே போதும் என்றும் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும் என்று கூறினார். 
 
இந்த பகுதிக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அதை அண்ணன் தீர்த்து வைப்பார் என்றும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக விஜய் பிரபாகரன் தேர்தலில் நிற்கிறார் என்றும் அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்