டம்மியாகும் சென்னை; அரசியல் மையமாகும் மதுரை? சூசக செய்தி!

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (12:44 IST)
மதுரையை இரண்டாவது தலைநகர் ஆக்கும் திட்டத்தை ஆதரித்து பேசியுள்ளார் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ. 
 
தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகர் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தமிழக தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில் அனைத்து துறை செயல்பாடுகளும் சென்னையிலேயே நடைபெற்று வருவதாலும், மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் புதிய தலைநகர் மாற்றுவது குறித்த கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
 
இந்நிலையில் மதுரையை மையமாக கொண்டு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இரண்டாவது தலைநகரை உருவாக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். 
 
இந்த முடிவை ஆதரிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அரசியலுக்கும், கலையுலகிற்கும் தலைநகராக மதுரை திகழ்கிறது. நிச்சயமாக மதுரை 2வது தலைநகராக வேண்டும். ஆனால் மதுரைக்கு தான் முதன்மை இடம். அரசியல் முடிவு எடுக்கும் இடம் மதுரை என செல்லூர் ராஜூ பேசியுள்ளர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்