சேலத்தில் முழு ஊரடங்கு: அதிரடி காட்டும் ஆட்சியர்!!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (14:41 IST)
சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 
 
நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு ஏற்ப சில ஊரடங்கு தளர்வுகளை மாநில முதல்வர்கள் மேற்கொண்டனர். ஆனால், தமிழகத்தில் ஊரடங்கு தொடரும் என்றே கூறப்பட்டது. 
 
இந்நிலையில் சேலத்தில் நேற்று புதிதாக ஐந்து பேருக்கு கொனோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை 2 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டுமே 2 நாட்களுக்கு இயங்கும் என்றும், வாகனங்கள் மூலம் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வந்து வழங்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, 2 நாட்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை என்றும், ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இதேபோல கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 

இதோடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்