நம்மக்கிட்டதான் காலேஜ் நிறைய இருக்கு; நீட் வேண்டாம்! – சரத்குமார்!

திங்கள், 14 செப்டம்பர் 2020 (14:04 IST)
மத்திய அரசின் மும்மொழி கொள்கை குறித்து பேசியுள்ள சரத்குமார் மொழியை திணிப்பது தவறான விஷயம் என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முக்கியமாக அதில் மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிக்கும் செயல்பாட்டிற்கு எதிராக பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் மும்மொழி கொள்கை குறித்து பேசியுள்ள நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் “ஒரு மொழியை விரும்பி கற்றுக்கொள்வது வேறு. ஆனால் படித்தே ஆக வேண்டும் என திணிக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

மேலும் நீட் விவகாரம் குறித்து பேசியுள்ள அவர் “தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ கல்லூரிகள் உள்ளன. எனவே தமிழகத்திற்கு நீட் அவசியமில்லை என முதல்வர் முடிவெடுக்க வேண்டும்”எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்