பத்திர பதிவு கட்டணத்தை குறைக்க கோரிக்கை!!

புதன், 23 செப்டம்பர் 2020 (16:31 IST)
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பத்திர பதிவு கட்டணம் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பத்திர பதிவு கட்டணம் உள்ளது. தமிழகத்தில் பதிவு கட்டணத்தை 11 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
 
அண்டை மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிராவில் அண்மையில் பதிவு கட்டணம் 5 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் வீடு வாங்க 38 சதவிகிதம் வரி கட்ட வேண்டியுள்ளது. 
 
ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினால் பத்திர பதிவு, முத்திரை வரி, ஜி.எஸ்.டி வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை சேர்த்து 38 லட்ச ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. எனவே பத்திர பதிவு கட்டணத்தை குறைக்க கோரப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்