என்ன ஆச்சு விஜயகாந்துக்கு? – ஏன் டெல்டா செல்லவில்லை?

சனி, 1 டிசம்பர் 2018 (10:20 IST)
டெல்டா பகுதிகள் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிகராக இருந்த காலத்தில் இருந்தே மக்கள் பிரச்சனைகளில் உடனிடியாகக் களமிறங்கி மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் அரசியலில் இறங்கிய பின்னர் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு மக்கள் பாதிப்படையும் போது முதல் ஆளாக வேட்டியை மடித்துக் கொண்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு ஆறுதல் கூறும் வழக்கமுடையவர்.

அப்படிப்பட்ட கேப்டன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை இதுவரை சந்திக்கவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மனைவி மற்றும் மைத்துனர் சுதீஷ் மட்டுமே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இதுபற்றி தேமுதிக வட்டாரங்களில் பேசப்பட்டு விஷயம் என்ன்வென்றால் ‘ கேப்டனுக்கு இன்னும் உடம்பு முழுமையாகக் குணமாகவில்லை. அதுமட்டுமல்லாமல் சரளமாக பேச முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். மேலும் புயல் பாதித்த பகுதிகளில் நோய் தொற்று எளிதாக பரவும் வாய்ப்புகள் உள்ளதால் மருத்துவர்கள் அவரை டெல்டா பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். அதனால்தான் பிரேமலதாவும் சுதீஷும் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். கேப்டன் பூரணமாக குணமடைந்ததும் மக்களைப் பழையபடி சென்று சந்திப்பார்’.

தேமுதிக சார்பில் டெல்டா மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரனப்பொருட்கள் தேமுதிக நிர்வாகிகளால் வழங்கப்பட்டு வருகினறன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்