ரமலான் சிறப்புத் தொழுகையை வீட்டில் இருந்தே நடத்த வேண்டும் – அரசின் தலைமை காஜி

வியாழன், 16 ஏப்ரல் 2020 (21:06 IST)
தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  வரும்  30 ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளா நிலையில்,  ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்த வேண்டும்  என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் , இஸ்லாமியர்களின்  சன்னி பிரிவைச் சேர்ந்த தலைமை காஜி, சலாவுதீன் மற்றும் ஷியா பிரிவு காஜி குமாம் முகமது ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

அதில், தமிழகத்தில் உள்ள 2895 பள்ளி வாசல்களுக்கு அரசு சார்பில்  5450 டன் அரிசின் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்